Home » » சுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…!

சுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…!

Written By Sri Shan on Tuesday, August 5, 2014 | 12:37 AM

எல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயின் காரணமாக 300 ஏக்கர் வரையான காட்டுப் பகுதி அழிவடைந்துள்ளது.

சந்தேகநபர்கள் மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சுற்றுலா பயணமாக எல்ல பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.