Home » » லஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…!!

லஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…!!

Written By Sri Shan on Tuesday, August 5, 2014 | 12:41 AM

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இவர் இன்று (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கொழும்பு பிரதான நீதவான் கிஹின் பிலபிடியவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற்றபோது நேற்று (04) கைதுசெய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிக்கும் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க ஐந்து இலட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக நான்கரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மீதமுள்ள 50,000 ரூபாவை வாங்க முற்பட்டபோதே இவர் கைதாகியுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.