Home » » முச்சக்கர வண்டிகளின் பாகங்களை கழற்றி விற்க முற்பட்ட இருவர் கைது.

முச்சக்கர வண்டிகளின் பாகங்களை கழற்றி விற்க முற்பட்ட இருவர் கைது.

Written By Sri Shan on Monday, August 4, 2014 | 8:10 AM

புத்தளம் - ரபவெவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகள் இரண்டின் பாகங்களை கழற்றி விற்க முற்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் ரபவெவ பிரதேசத்தின் வாகன சேவை நிலையம் மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளின் பாகங்களை கழற்றி விற்க முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். 

இவர்கள் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.