Home » » 157 புகலிடக் கோரிக்கையாளர்களும் நவுறுவுக்கு அனுப்பப்பட்டனர்

157 புகலிடக் கோரிக்கையாளர்களும் நவுறுவுக்கு அனுப்பப்பட்டனர்

Written By Sri Shan on Saturday, August 2, 2014 | 7:53 AM

அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக படகுமூலம் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள்  157 பேர்  பசுபிக் சமுத்திர நாடான நவுறுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

50 சிறார்கள் உட்பட 157 பேர் கொண்ட இக்குழுவினரின் பெரும்பலானோர் இலங்கைத் தமிழர்கள் என நம்பப்படுகிறது.

இவர்கள் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்து கடந்த ஜூன் மாதம் புறப்பட்டு அவுஸ்திரேலியா நோக்கி சென்ற நிலையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுக்கப்பட்டு அந்நாட்டு சுங்கத் திணைக்களத்தின் கப்பலொன்றில் பல வாரங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இவர்கள் கொகோஸ் தீவுக்கும் பின்னர் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்காக இந்திய தூதரக அதிகாரிகளை இவர்கள் சந்திப்பதற்கு அவுஸ்திரேலியா ஏற்பாடு செய்தது.

ஆனால், இந்திய தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் மறுத்ததையடுத்து அவர்கள் பசுபிக் தீவு நாடான நவுறுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இன்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.