Home » » ஆணுறைகளால் தயாரிக்கப்பட்ட பெண்களின் ஆடைகள்.

ஆணுறைகளால் தயாரிக்கப்பட்ட பெண்களின் ஆடைகள்.

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 6:43 AM

தலைமயிர், லூம் பேண்ட் போன்றவற்றினால் தாயரிக்கப்பட்ட ஆடைகள் பெரிய தொகைக்கு அண்மையில் விற்பனையானது. இந்நிலையில் பிரேஸிலைச் சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர் வித்தியாசமாக ஆணுறைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அறிமுகம் செய்துள்ளார்.

மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற சர்வதேச உதவிகள் மாநாட்டிலேயே இந்த ஆடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆணுறை ஆடைகள் மூலம் பாதுகாப்பான பாலியல் குறித்து இளையோரிடம் விழிப்புணர்வூட்டுவதே தனது நோக்கம் என்கிறார் ஆணுறை ஆடைகளை தயாரிக்கும் அட்ரியானா பேர்ட்டினி.

இவர் தயாரித்த பல ஆடைகள் கெட்வோல்க் நிகழ்வுகளில் மொடல்களால் அணியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்கத்திறன்மிக்க சூழலில் தனது தகவலை பரப்புவதும் நோக்கமாக உள்ளதாம்.

பாவனைக்குதவாத காலாவதியான பயன்படுத்தப்படாத ஆணுகளையே அட்ரியானா தனது ஆடைத் தயாரிப்பில் பயன்படுத்துகின்றார். ஆடை தாயரிப்புக்கென ஒரு வேலைத் தளத்தினையும் உருவாக்கியுள்ளார்.
அட்ரியாவின் ஆணுறை ஆடைகளின் நோக்கத்தினை அனைவரும் விரும்பாவிட்டாலும் பலரும் பராட்டியுள்ளனர். இதற்கும் முன்பும் சிலர் ஆணுகளால் ஆடை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.