Home » , » உலக அணியை சச்சின் தலைமையிலான மெரில்போன் அணி வென்றது

உலக அணியை சச்சின் தலைமையிலான மெரில்போன் அணி வென்றது

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 12:59 AM

இங்கிலாந்தின் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கிரிக்கெட் விற்பன்னர்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மெரில்போர்ன் கழக அணி 7 விக்கெட்களால் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஷேன் வோர்ன் தலைமையிலான உலக அணி 50 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 293 ஓட்டங்களைப் பெற்றது.  யுவராஜ் சிங் 134 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள் உட்பட 132 ஓட்டங்களைக் குவித்தார்.

மெரில்போன் கழக அணி பந்துவீச்சாளர்களில் சயீட் அவ்ரிடி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.  சச்சின் டெண்டுல்கர் 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

மெரில்போன் கழக அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் 145 பந்துகளில் ஆட்டமிழக்காமல்  181 ஓட்டங்களைக் குவித்து அவ்வணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஆரோன் பின்ச்சும் மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கரும் முதல் விக்கெட்டுக்காக 107 ஓட்டங்களைக் குவித்தனர். சச்சின் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதியில் 45.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது மெரில்போன் கழக  அணி.

பிரையன் லாரா 23 ஓட்டங்களையும் ஷிவ்நாரின் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

உலக அணியின் பந்துவீச்சாளர்களில்   போல் கொலிங்வூட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  முத்தையா முரளிதரன் 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.