Home » » ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இல்லை என்கின்றார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இல்லை என்கின்றார்.

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 6:46 AM

ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இஸ்­லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் சிரியா அல்­லது இஸ்­லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் லெவன்ட் (ஐ.எஸ்.ஐ.எல்) எனும் இஸ்­லா­மிய கிளர்ச்சி இயக்கத்தின்  உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாக சில ஊடகங்களும், இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டிருந்த போதிலும் அது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு எந்தொரு தகவலும் கிடைக்க வில்லை  எனவும் அவ்வமைப்பைச் சேர்ந்த எவரும் நாட்டில் இல்லை எனவும்  பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையத்தின் பணிப்பாளரும் இராணுவ ஊடகப்பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மெட்ரோவுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு தகவல்களை வெளியிட்டு சிலர் தமது  அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார். எந்தொரு அடிப்படைவாத அமைப்புக்கும் நாட்டினுள் செயற்படுவதற்கும் ஒருபோதும் இடம் கொடுக்கப்படவும் மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.