Home » » நானுஓயா தோட்ட குடியிருப்பு தொகுதியில் தீ.

நானுஓயா தோட்ட குடியிருப்பு தொகுதியில் தீ.

Written By Sri Shan on Saturday, July 26, 2014 | 7:20 AM

தலவாக்கலை நானுஓயா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீயினால் 4 வீடுகளின் கூரைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

மேற்படி தோட்டத்தின் 2 இலக்க லயன் தொடர் குடியிருப்பொன்றே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் தீக்கிரையானது.

தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மக்கள் இருந்துள்ளனர். ஒருவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.

சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண விவசாய துறை அமைச்சர் எம். ராம், தலவாக்கலை லிந்துலை நகர சபை உபதலைவர் பிரசாத், நகரசபை உறுப்பினர் ரொசான் ராஜசேகர், கட்சியின் மாநில இயக்குனர் லோகதாஸ் ஆகியோர் விடயங்களை அறிந்து கொண்டதுடன் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அமைச்சர் ராமின் வேண்டுகோளுக்கிணங்க அத்தோட்ட முகாமையாளர் வீரக்கோன் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து பாதிப்புக்குட்பட்ட லயன் குடியிருப்பு தொகுதியின் கூரைத்தகடுகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

தீ விபத்து தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.