Home » , » ஜடேஜாவுக்கு அபராதம்: பி.சி.சி.ஐ. அதிருப்தி.

ஜடேஜாவுக்கு அபராதம்: பி.சி.சி.ஐ. அதிருப்தி.

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 11:40 PM

ஜேம்ஸ் அண்டர்சன் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஐ.சி.சி விதிகளுக்கு முரணாக நடந்துகொண்டதாக இடம்பெற்ற விசாரணையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜடோஜாவுக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் மதிய போசனை இடைவெளியின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை தள்ளி விட்டு தகாத முறையில் அண்டர்ஸன் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை இடம்பெற்றது.

ஆனால் எதிர்பாராத விதமாக ஜடேஜா குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது சகலதுறை வீரர் ஜடேஜா தவறிழைக்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பிடிவாதமாகவுள்ளது.

2ஆம் தர குற்றத்திற்கு பதிலாக முதல் தர குற்றமாக இனங்காணப்பட்டு போட்டியின் 50 சதவீத ஊதியமும் விதித்திருக்க வேண்டியதில்லை என்கிறது பி.சி.சி.ஐ.

டேவிட் பூன் தலைமையில் இடம்பெற்ற இந்த விசாரணையின் முடிவு பொறுப்பற்றதுடன் வேதனையளிப்பதாகவும் உள்ளது என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.