Home » » ராஜிவ்காந்தியின் தன்னிச்சையான முடிவு

ராஜிவ்காந்தியின் தன்னிச்சையான முடிவு

Written By Unknown on Thursday, July 31, 2014 | 11:17 PM

மத்திய அமைச்சரவையின் கருத்தைக் கேட்காமல், ராஜிவ்காந்தி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுயசரிதை புத்தகம் எழுதியுள்ள நட்வர்சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார். 

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவது என்பது அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தியின் தன்னிச்சையான முடிவாக இருந்ததாக குறிப்பிட்டார். 

இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேயின் வேண்டுகோளின் பேரில், ராஜிவ்காந்தி அவ்வாறு நடந்துகொண்டதாகவும், இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர்களிடமோ, உயர் அதிகாரிகளிடமோ அவர் ஆலோசிக்காமல், தெளிவான நோக்கமில்லாமல் செயல்பட்டதாகவும் நட்வர்சிங் தெரிவித்தார். 

இதனால் இலங்கை தொடர்பான ராஜிவ்காந்தி கொள்கையின் முடிவாக அவரது மரணம் அமைந்துவிட்டதாகவும் நட்வர்சிங் தெரிவித்தார். 

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், சோனியா காந்தி இத்தாலியைச் சேர்ந்தவர் என மறைமுகமாகச் சாடினார். 

நேரு குடும்பத்திற்கு 45 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த தம்மிடம் சோனியா காந்தி இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ள நட்வர் சிங், ஓர் இந்தியர் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.