Home » » எம்பிலிப்பிட்டிய தனியார் தொலைபேசி நிறுவனத்தில் கொள்ளை

எம்பிலிப்பிட்டிய தனியார் தொலைபேசி நிறுவனத்தில் கொள்ளை

Written By Sri Shan on Tuesday, July 29, 2014 | 6:14 AM

எம்பிலிப்பிட்டிய  பிரதேசத்தில்  நேற்றுக் காலை தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் ஆயுதமுனையில் 11,65085 ரூபாவை  இருவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கினறது.

குறித்த நிறுவனத்தின் பெண் உழியர் ஒருவர் நேற்றுக் காலை நிறுவனத்திலிருந்த பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்த போது குறித்த நிறுவனத்துக்கு வந்த இருவர் 50 ரூபா பெறுதியான 10 தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை பெற்றுள்ளனர்.

அதற்குரிய பணத்தையும் செலுத்திய பின்னர் அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியைக் காட்டி பெண் ஊழியரை பயமுறுத்தி  பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன்  நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று ஊழியர்களையும் பயமுறுத்தி குளியறையில் போட்டு மூடி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையை தொடர்ந்து வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.