Home » » ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்.

ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்.

Written By Sri Shan on Wednesday, July 30, 2014 | 10:20 PM

இலங்கையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைக் கண்டித்து ஊடக அமைப்புக்கள் இன்று (31.07.2014) கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன. 

குறிப்பாக பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் அண்மைய சதி முயற்சிகளை அம்பலப்படுத்தி யாழ். மத்திய பேரூந்து நிலையம் முன்பு நண்பகல் 12.00 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. 

இதற்கு சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட பிரதான ஜந்து ஊடக கட்டமைப்புகளுடன் வடக்கிலுள்ள ஊடக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

யாழ். ஊடக அமையம், சுதந்திர ஊடகக்குரல், நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பு, வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் என்பவற்றுடன் கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட ஊடக அமைப்புக்களும் இவ் போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து பங்கெடுக்கவுள்ளன. 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.