Home » » போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைது.

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் நால்வர் உட்பட ஐவர் கைது.

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 11:41 PM

போலி நாணயத்தாள்களை எடுத்துச் சென்ற பெண்கள் நால்வர் உட்பட ஐவர் குருநாகலில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குருநாகல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து வேன் ஒன்றை சோதனையிட்டபோது வேனில் பயணித்த நபரிடமிருந்து இப் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 2000 ரூபா போலி நாணயத்தாள் 20 மற்றும் 5000 ரூபா போலி நாணயத்தாள் 6 கைப்பற்றப்பட்டுள்ளன. 

வேனில் பயணம் செய்த பெண்கள் நால்வர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்கேநபர்கள் இன்று (28) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.