Home » » பலஸ்தீன சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளான்.

பலஸ்தீன சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளான்.

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 12:57 AM

பலஸ்தீனத்தில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுவனொருவன் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பலஸ்தீன  சட்டமா அதிபர் மொஹமட் அலுவேய்வி தெரிவித்துள்ளார்.

16 வயதான மொஹமமட் அபு காதர் எனும் இச்சிறுவன், ஜெருஸலேமின் கிழக்குப் பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை கடத்தப்பட்டான். சில மணித்தியாலங்களின்பின்னர் அவனின் உடல் ஜெருஸலேம் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

யூத கடும்போக்காளர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பலஸ்தீனர்கள் நம்புகின்றனர்.

இச்சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது, நுரையீரலில் புகைக்கான தடயங்கள் தென்பட்டுள்ளதாக பலஸ்தீன சட்டமா அதிபர் மொஹமட் அலுவேய்வி தெரிவித்துள்ளார். இதனால் அவன் உயிருடன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளான் எனத் தெரியவந்துள்ளது.

 இதேவேளை மேற்குக் கரை பகுதியில் கடந்த மாத இறுதியில் இஸ்ரேலிய இளைஞர்கள் மூவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாக மேற்படி பலஸ்தீன சிறுவன் கடத்திக் கொல்லப்பட்டானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.