Home » » வன ஜீவ அதிகாரியை தாக்கிய நபருக்கு பொலிஸ் வலை வீச்சு..!!

வன ஜீவ அதிகாரியை தாக்கிய நபருக்கு பொலிஸ் வலை வீச்சு..!!

Written By Sri Shan on Thursday, July 31, 2014 | 11:14 PM

வில்பத்து காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டிய மரங்களை கைப்பற்றும்போது வன ஜீவ அதிகாரியை தாக்கிய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முள்ளிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் வில்பத்து காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி எடுத்துச் செல்வதாக வன ஜீவ அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் வன ஜீவ அதிகாரிகள் குழு சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதேவேளை இதன்போது மரக் குற்றிகள் 57 கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த 15 பேர் அடங்கிய குழுவினர் அதிகாரிகளை அச்சுறுத்தி சந்தேகநபரை விடுதித்துள்ளனர்.

அவ்விடத்திலிருந்த வன ஜீவ அதிகாரி ஒருவருக்கு அக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.