Home » » கடல் சுற்றுலாப்பறவைகளின் முட்டை கைப்பற்றப்பட்டது.

கடல் சுற்றுலாப்பறவைகளின் முட்டை கைப்பற்றப்பட்டது.

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 6:39 AM

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருமலை கடற்கரை பிரதேசத்தில் வெளிநாட்டு கடல் சுற்றுலாப்பறவைகளின் ஒரு தொகை முட்டைகளை மீன்பிடி படகில் எடுத்து வந்த 4  சந்தேகநபர்கள் சனிக்கிழமை  கைது செய்யப்படடுள்ளதுடன் படகும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இவர்களிடம் இருந்து இவ்வாறான 452 முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பக்கும் இந்திய ராமேஷ்வரத்துக்கும் இடையில் அமைந்துள்ள 4ஆம் இலக்க மணல் தீவில் இருந்து இம்முட்டைகள் எடுத்து வரப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.