Home » » ரஜரட்ட மாணவர்களை மன்னிக்கவும்: ஜனாதிபதி…!!

ரஜரட்ட மாணவர்களை மன்னிக்கவும்: ஜனாதிபதி…!!

Written By Sri Shan on Friday, July 25, 2014 | 8:23 PM

ரஜரட்ட மாணவர்களுக்கு மன்னிப்பளித்து பல்கலைக்கழகத்தை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட, பல்கலைக்கழக உப-வேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தனவுக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு இன்று வெள்ளிக்கிழமை பணித்துள்ளார்.

உப-வேந்தர் உள்ளிட்ட விரிவுரையாளர்களை, பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் ஒருநாள்முழுவதும் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘பல்கலைக்கழகத்தை மூடியமையால் 95 சதவீதமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தை கையிலெடுப்பதற்கு மாணவர்களுக்கு அனுமதியளிக்கமுடியாது. அவர்கள் கற்க வேண்டும். தவறிழைப்பது மனிதனின் இயல்பு, மன்னிப்பது தெய்வத்தின் செயல். ஆகையினால் அந்த மாணவர்களுக்கு மன்னிப்பளித்து பல்கலைக்கழகத்தை விரைவாக திறக்கவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தவறிழைத்த சுமார் 200 மாணவர்களுக்கு ஜயவர்தனபுர பல்கலைக்கழக உப-வேந்தர் மன்னிப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.