Home » » டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் விடுவிப்பு….!!

டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் விடுவிப்பு….!!

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 7:42 PM

டுபாய் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டுபாயில் அண்மையில், மாற்றியமைக்கப்பட்ட விளக்கமறியல் சட்டங்களுக்கு அமைவாக குறித்த இலங்கையர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மனைவியால் கைவிடப்பட்ட தனது 4 வயது குழந்தையுடன் சேர்ந்து வாழ்வதற்கு குறித்த இலங்கையருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (07) செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் மனைவி தனது 4 வயது குழந்தையை கைவிட்டு சென்றுள்ளதாக மற்றுமொரு இலங்கையர், அந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக டுபாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக குறித்த இலங்கையர் செலுத்த வேண்டிய கடன் தொகையை வங்கிக்கு செலுத்தியுள்ளதுடன் அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவித்துள்ளதாக டுபாய் மனித உரிமை திணைக்களத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மொஹமட் அல் மூர் கூறினார்.

மேலும், குறித்த நபரை நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதால் அவர் தனது மகளுடன் இலங்கைக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளதுடன், அவர் இலங்கையை சென்றடையும் வரை அவரது செலவுக்கு தேவையான பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த இலங்கையரின் கடன் சுமை காரணமாக அவர்தனது தொழிலை இழந்ததையடுத்து அவரது மனைவியான பிலிப்பைன் நாட்டு பெண் அவரையும் நான்கு வயது பெண் குழந்தையையும் கைவிட்டதுடன் டுபாயிலிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் அவர் கார் கழுவும் பணியில் ஈடுபட்டதுடன் தனது நான்கு வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த போது கடந்த பெப்ரவரி மாதம் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.