Home » , » விஷால் நடிக்கும் புது படத்துக்கு தலைப்பு பிரச்சினை!!

விஷால் நடிக்கும் புது படத்துக்கு தலைப்பு பிரச்சினை!!

Written By Sri Shan on Thursday, July 24, 2014 | 7:53 AM

விஷால் நடிக்கும் புது படத்துக்கு தலைப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.ஹரி டைரக்ஷனில் பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். இந்த படத்தின் 60 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது.

தீபாவளிக்கு படம் ரிலீசாகிறது. இதையடுத்து தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் புது படம் தயாரிக்கிறார். அதில் அவரே ஹீரோ. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். ஹீரோயினாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு ஆம்பள என்ற பெயரை வைக்க முடிவு செய்தனர். 

ஆனால் இந்த தலைப்பு வேறொரு கம்பெனியிடம் உள்ளதாம். அவர்கள் தலைப்பை விட்டுத்தர மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.சுந்தர்.சி இயக்கும் படத்துக்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும். அதனாலேயே இதை தேர்வு செய்துள்ளனர். எனினும் இது தொடர்பாக எந்த இறுதி முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என கோடம்பாக்க வட்டாரங்கள் கூறின.

இதேபோல் தனுஷ் தயாரிக்கும் படத்துக்கு காக்கி சட்டை பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த தலைப்பில் பழைய படத்தை தயாரித்த சத்யா மூவிஸ், தலைப்பை விட்டுத்தர மறுத்துவிட்டது. சிம்பு நடிக்கும் வாலு பட தலைப்பும் வேறொரு நிறுவனத்திடம் இருந்தது. நீண்ட முயற்சிக்கு பிறகு அந்த தலைப்பு சிம்புவுக்கு கிடைத்தது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.