Home » , » பார்வை குறைந்த கிரிக்கட் அணியினருக்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி உதவி..!

பார்வை குறைந்த கிரிக்கட் அணியினருக்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி உதவி..!

Written By Sri Shan on Thursday, July 24, 2014 | 9:01 PM

பார்வை குறைந்த இலங்கையின் மாற்றுத் திறனாளிகள் அணிக்கு நிதி திரட்டும் மற்றும் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வில் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியினருடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி இணைந்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் இவ் வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள பார்வை குறைந்த இலங்கையின் மாற்றுத்திறனாளிகள் அணிக்கு நிதி திரட்டப்பட்டு வருகின்றது.

திரட்டப்பட்ட நிதியில் 925000 ரூபாவுக்கான ஆவணத்தை தென் ஆபிரிக்க அணித் தலைவர் ஹஷீம் அம்லா, இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோரிடமிருந்து பார்வை குறைந்த மாற்றுத் திறனாளிகள் அணித் தலைவர் அசன்க பெற்றுக்கொண்டார்.

எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெற்ற இந்த வைபத்தில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி கூட்டாண்மை விடயங்கள், நாமம் மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி சஞ்சீவனி டி சில்வா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.