Home » » சீகிரியவில் குளவி கொட்டியதால் வெளிநாட்டவர்கள் காயம்.

சீகிரியவில் குளவி கொட்டியதால் வெளிநாட்டவர்கள் காயம்.

Written By Sri Shan on Friday, July 25, 2014 | 7:39 AM

சீகிரியவை சுற்றிப்பார்பதற்காக சென்றபோது குளவி கொட்டுக்கு சிலர் இலக்காகிய வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் 7 பேரும் உள்ளூர் பயண வழிகாட்டி ஒருவரும் வைத்தியசாலையில் யில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இன்று பகல்  சீகிரியாவை சுற்றிபார்பதற்காக வெளிநாட்டு உல்லாச பயணிகள் சென்றபோது சிங்க பாத பகுதியின் அருகில் வைத்து  குளவிகள் தாக்கியுள்ளன.

இதனால்  7 பேர் கிம்பிஸ்ஸ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆண்கள் நால்வரும்  பெண்கள் நால்வரும் அடங்குகின்றனர்.

இவர்களில் சீன பெண்ணொருவருக்கும் ரஷ்ய பெண்ணொருவருக்கும்  அதிக பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

ஏனையோர் கிம்பிஸ்ஸ  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். இதில் காமடைந்தவர்கள் ஹங்கேரி, ஜப்பான், ஹொங்ஹொங் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.