Home » » இலங்கைக்கு முன்னுரிமை – சர்வதேச நாணய நிதியம்…!!

இலங்கைக்கு முன்னுரிமை – சர்வதேச நாணய நிதியம்…!!

Written By Sri Shan on Wednesday, July 30, 2014 | 10:18 PM

குறுகிய கால அபிவிருத்தி திட்டங்களுக்கு மாத்திரம் வரையறுக்காது மத்திய மற்றும் நீண்ட திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் அறிவுப்பூர்வமான விடயம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ராகேஸ் மொஹான் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராகேஸ் மொஹான் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திட்டமிடும் போது நாட்டின் நிலையான மேம்பாட்டுக்கு தாம் முன்னுரிமை வழங்கி செயற்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்க நாடுகள் ஒன்றிணைந்து அண்மையில் ஆரம்பித்த பிரிக்ஸ் வங்கி தொடர்பில் இதன்போது இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த தருணத்தில் இலங்கைக்கு அதிக அனுகூலங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.