Home » » களவாடப்பட்ட புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மீட்பு.

களவாடப்பட்ட புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மீட்பு.

Written By Sri Shan on Wednesday, July 30, 2014 | 1:08 AM

கந்தானை புனித செபஸ்தியர் ஆலயத்தில் இருந்து புனித செபஸ்தியரின் திருப்பண்டம் களவாடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

​நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்ட வேளை, புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மற்றும் அது வைக்கப்பட்டிருந்த கலசமும் இன்று அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த புனித செபஸ்தியரின் திருப்பண்டம் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.