Home » » சோனியா காந்தி பிரதமராவதை மகன் ராகுல் தடுத்தாரா…!

சோனியா காந்தி பிரதமராவதை மகன் ராகுல் தடுத்தாரா…!

Written By Sri Shan on Thursday, July 31, 2014 | 7:05 AM

இந்தியாவின் பிரதமராக சோனியா காந்தி வருவதை அவரின் புதல்வரான ராகுல்காந்தி தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாயார் அரசியல் படுகொலைக்கு ஆளாக நேரிடலாம் என்ற அச்சத்தினால் ராகுல் காந்தி இவ்வாறு செயற்பட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கே நட்வர் சிங் கூறியுள்ளார்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியின் பல சிரேஷ்ட தலைவர்களின் எதிர்ப்புக்களுக்கு சோனியா காந்தி ஆளாகியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சோனியா காந்தி இத்தாலியர் என்பதால் நாட்டின் பிரதமராக வருவதற்கு சரத் பவார், பீ ஏ சங்மா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைகளை சமாளித்த அவர், நாட்டின் பிரதமராக வருவதற்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்திருந்தார்.

எனினும் கட்சிக்குள் இருந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே அவர் இந்த தீர்மானத்தை எடுத்ததாக பலராலும் நோக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.