Home » » வெள்ளவத்தையில் ஆட்டோ சாரதிகளுக்கு புதிய சீருடை அறிமுகம்…!!

வெள்ளவத்தையில் ஆட்டோ சாரதிகளுக்கு புதிய சீருடை அறிமுகம்…!!

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 7:12 AM

கொழும்பு-06, வெள்ளவத்தை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய சீருடையை காவல்துறையினர் இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, வெள்ளவத்தை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 700 க்கும் அதிகமான சாரதிகள் புதிய சீருடையை அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

நீல நிறத்திலான அரை கை மேற்சட்டை புதிய சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவொரு நிறத்திலும் காற்சட்டையை அணிய முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தவிர வெள்ளவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி சாரதிகள் கட்டை காற்சட்டை மற்றும் சாரத்தை அணிய முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு;ள்ளது.

வாடகை வாகன போக்குவரத்து பணியில் ஈடுபட்டு தரப்பினர் தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையை மாற்றும் நோக்கிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டள்ளது.



0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.