Home » » நைஜீரியாவில் 3 பெண் தீவிரவாதிகள் கைது….!!

நைஜீரியாவில் 3 பெண் தீவிரவாதிகள் கைது….!!

Written By Sri Shan on Saturday, July 5, 2014 | 7:10 AM

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அங்குள்ள போர்னோ மாகாணத்தில் இது உருவானது. வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும் இவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி மாணவிகள் 200 பேரை இவர்கள் கடத்தி சென்றுவிட்டனர். அவர்களை இன்னும் மீட்க முடியவில்லை.

போகோஹாரம் அமைப்பில் ஆண்கள் மட்டுமே தீவிரவாதிகளாக இருந்து வந்தனர். ஆனால் அதில் பெண்கள் பிரிவும் இயங்குவது தற்போது தெரியவந்தது. இளம்பெண்கள் மற்றும் விதவைகள் இந்த தீவிரவாத அமைப்பில் உள்ளனர்.

அவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதகாலி நகருக்கு சென்ற இவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டனர். இந்த தகவலை நைஜீரியாவின் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.



0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.