Home » » பஸ் விபத்து: 17 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் காயம்.

பஸ் விபத்து: 17 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் காயம்.

Written By Unknown on Wednesday, July 30, 2014 | 10:25 PM

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 17 பேர் காயமடைந்துள்ளனர். 

திருகோணமலையில் இருந்து அலுத்கம நோக்கி சென்ற பஸ் ஒன்றே, பலுகஸ்வெவ பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் கயாமடைந்த 17 சிப்பாய்களும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையே பஸ் குடைசாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.