Home » » 13 வயது மாணவியை, துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் மாட்டினார்..!

13 வயது மாணவியை, துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் மாட்டினார்..!

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 6:41 AM

வவுனியாவில் உள்ள பிரபல கல்வி நிலையம் ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற வவுனியா நகர தேசிய பாடசாலை ஒன்றின் ஆசிரியர் வசமாக மாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-

வவுனியாவின் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நகர தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கற்பித்து வந்தார்.

அக் கல்வி நிலையத்தில் தரம் 8 க்கு கற்பிக்கும் குறித்த ஆசிரியர் அக்கல்வி நிலையத்தில் உள்ள மாணவி ஒருவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் கல்வி நிலைய நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும் குறித்த ஆசிரியர் கல்வி நிலையத்தால் நிறுத்தப்பட்டு புதிய ஆசிரியர் ஒருவர் தற்போது அக்கல்வி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைகளிலும், கல்வி நிலையங்களிலும் அதிக மாணவர்களுக்கு போதித்து அவர்களை வழிநடத்த வேண்டிய இவர்களே இப்படி செய்தால் நாடு தங்குமா?


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.