Home » , » டேவிட் மொயர் அதிரடி நீக்கம்.

டேவிட் மொயர் அதிரடி நீக்கம்.

Written By Sri Shan on Tuesday, April 22, 2014 | 6:42 AM

மேன்செஸ்டர் கால்பந்து கழக அணியின் பயிற்சியாளராக கடமையேற்று 10 மாதங்களில் டேவிஸ் மொயர் அதிரடியாக பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சுமார் 27 வருடங்களாக மேன்செஸ்டர் கால்பந்து கழக அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக செயற்பட்ட சேர் அலெக்ஸ் பெர்குஸனின் ஓய்வினைத் தொடர்ந்து டேவிட் மொயர் 6 வருட ஒப்பந்தத்தில் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பதியேற்று சுமார் 10 மாதங்களேயான நிலையில் மொயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மேன்செஸ்டர் அணியின் 3ஆவது குறுகிய கால பயிற்றுநராக மாறியுள்ளார் மொயர்.

தனது பதவிக்காலத்தில் அணிக்கான கடின உழைப்பு, நேர்மை மற்றும் மரியாதை போன்றவற்றுக்காக மேன்செஸ்டர் நிர்வாகம் மொயருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

மொயரின் பதவிக்காலத்தில் மேன்செஸ்டர் அணியின் மோசமான வெளிப்பாடுகளே அவரை பதவிவிலக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பயிறுற்றுநரை நியமிக்குவரையில் மேன்செஸ்டர் அணியின் பயிற்றுநராக ரையன் கிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.