Home » » ராமஜென்மபூமியா? ராம வன்ம பூமியா? கொலைகாரர்களின் கூடாரமா?

ராமஜென்மபூமியா? ராம வன்ம பூமியா? கொலைகாரர்களின் கூடாரமா?

Written By Unknown on Thursday, February 6, 2014 | 9:54 AM

ராமன் அவதரித்ததாகக் கதை அளக்கும் அந்த ராமஜென்ம பூமி கொலைகார சாமியார்களின் வேட்டைக்காடாக, அடியாட்களை வைத்து சாமியார்கள் படுகொலை செய்யும் கொலைக் களமாகக் காட்சி அளிப்பதை தெகல்கா அம்பலப்படுத்தியுள்ளது - படியுங்கள்

வருடம் 1993 பிப்ரவரி ராம்ஜென்ம பூமி கோவிலின் தலைமை பூசாரி லால் தாஸ் ராமஜென்ம பூமி விவகாரத்தில் பிஜேபி மற்றும் விஎச்பியின் தலையீட் டையும் அவர்கள் ஏற்படுத்திய வன்முறை மற்றும் அதன் பிறகு நாடுமுழுவதும் எழுந்த மதக்கலவரங்கள் குறித்து கடுமை யாக எதிர்த்து வந்தார். மேலும் பாபரி மஸ்ஜீத் பாதுகாப்பு அமைப்புக் குழுவுடன் இணைந்து சமாதான நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த நிலையில் மர்ம அடையாளம் தெரியாத நபர்களால் 1993 நவம்பரில் அயோத்தி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இருக்கும்போது கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து 22 வருடங்கள் ஆகிவிட்டன.

இன்றுவரை கொலையாளிகளை பிடித்த பாடில்லை, கொலையாளிகள் குறித்த எந்தத் தக வலும் இல்லை கொலை நடந்த உடனே சில வேற்றுமத நபர்களை கைது செய்த னர். ஆனால் சில நாள்களுக்கு பிறகு கைதானவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என தெரியவர அனை வரும் விடுதலை செய்யப்பட்டனர். 

அந்தக் கொலை வழக்கு இன்றும் மர்மம் அவிழாத ஒன்றாக இருந்து வருகிறது. பாபா லால் தாஸ் கொலைக்கு பிறகு புதிய தலைமைப்பூசாரியை தேடும்  பணி துவங் கியது. அது பாபர் மசூதி இடிக்கப்பட்டு பெரும் கலவரம் நடந்து முடிந்த தருணம், ஆகையால் இந்தப் பணிக்கு நல்லதொரு பூசாரியைத்தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது. அந்தப்பணிக்காக சில தகுதிகள் பட்டியலிட்டனர்.

அவை 1. எந்த ஒரு குற்றப்பின்னணியில்லா தவராக.

2. அரசியல்வாதிகள் மற்றும் இதர இயக்கங்களுடன் ஒட்டும் உறவும் இல்லா திருக்கவேண்டும்.

3. பெண்களுடன் உறவு இல்லாத,

4. காவல் நிலையத்தில் வழக்கு வாய்தா இல்லாத,

5. மற்றும் அசையும் அசையாச் சொத் துக்கள் குறுக்கு வழியில் ஈட்டாதவராக இருக்கவேண்டும்.

நவீன ரக வலை போட்டுத்தேடி னாலும் இப்படிப்பட்டவர் கிடைப்பாரா? சுமார் 3 ஆண்டுகளாக இவர்கள் தேர்ந் தெடுக்க பரிந்துரை செய்பவர்கள் அனை வருமே மேற்கண்ட அய்ந்து விதிகளுக் குள் அடங்கிவிடுகிறார்கள். ஏதாவது ஒரு குற்றச்செயல் புரிந்த சாமியாராகவே இருந்தனர்.  

இருப்பினும் வேதாளம் விக்ர மாதித்தன் போல் விடாப்பிடியான தேட லுக்குப்பிறகு மேற்கு வங்கத்தைச்சேர்ந்த சத்யேந்திர தாஸ் என்பவர் கிடைத்தார். ஆனால் அவரைத் தேர்ந்தெடுத்ததற்கு அயோத்தி சாமியார்கள் சமிதியான ஆச்சார்யா மகந்த் சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது, இன்றும் தெரிவித்து வருகிறது.

மேலும் அது சத்யேந்திர தாஸை முழு மனதுடன் ஏற்கமாட்டோம் என்று தீர் மானமே போட்டுவிட்டது. அதன் பிறகு அவர் மீது பல முறை கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றன. நிலைமை விபரீதமாவதை அறிந்த நகர நிர்வாகம் 24 மணிநேரம் ஆயுதம் ஏந்திய காவலர்களை பாதுகாப்பிற்காக நியமித்தது, கோவில் நிர்வாகமும் தனி யாக பாதுகாவலர்களை நியமித்தது.

இதுதான் ராம ஜென்ம பூமி சாமியார்களின் நிலை

நிகழ்காலத்திற்கு திரும்புவோம். 21 ஜூலை 2013 சராயு நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய நிலத்திற்காக இரண்டு சாமியார் குழுக்கள் இடையே பெரிய கலவரம் நிகழ்ந்தது. ஒரு குழு பகவான் தாஸ் என்ற சமாஜ்வாதி கட்சி ஆதரவு பெற்ற சாமியார் மற்றும் ஹரிசங்கர் தாஸ் என்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற இரு குழுக்களும் அயோத்தியின் புறநகரில் மோதிக்கொண்டன. 

 எப்போதும்போல கல் கம்பு கத்தியுடனான கலவரமல்ல; வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைதுப்பாக்கி சகிதம் மோதிக்கொண்டனர். இதில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார்.  சுமார் 200 ஆண்டுகாலமாக நடந்து வரும் இதுபோன்ற வன்முறைகள் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பரிணாமத்தில் ஆயுதங்களுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. ராமரின் ஜென்ம பூமி தற்போது ராமவன்மபூமியாக மாறி நீண்ட காலமாகி விட்டது. நவீன ரக துப்பாக்கிகளுடன் சாமியார்கள்

சாமியார்களின் கரங்களில் ஜெப மாலையும், கமண்டலமும் தான் இருக்க வேண்டும் என்பது விதி; ஆனால் இங்கே சாராய பாட்டில்கள், குடிலின் இரகசிய அறையில் விபாச்சாரிகள் மற்றும் இடுப் பில் முன்பு கத்தி மற்றும் வாள் இருந்தது, தற்போது நவீன காலமாகையால் உக்ரேன் தயாரிப்பு துப்பாக்கிகளும், நவீன ரக கையடக்க துப்பாக்கிகளும் உள்ளன. 

மாயையிலிருந்து தப்பித்து, ஆசா பாசங்களில்லாமல் முக்திபெறும் நோக் கோடு சாமியாராகிறோம் என்று சொல் லும் சாமியார்கள் நிலவெறி மற்றும் பெண்ணாசை பிடித்து பெருநகரங்களில் ரகளை செய்யும் மாஃபியாக்கள் போல் கைகளில் துப்பாக்கி ஏந்தி வலம் வருகின்றனர். 

அயோத்தியாவில் பல சாமியார்களின் மீது வயதுக்கு வராத குழந்தைகளை வல்லுறவு கொண்ட குற்றச்சாட்டுக்கள் உள்ளன ஆனால் சாமியார் வேடம் மற்றும் மக்களின் மூடத்தனத்தால் அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், குருவைக்கொலை செய்து

அந்த இடத்தைப்பிடி!

குருவிற்கு அடுத்துதான் பிரம்மா, விஷ்ணு சிவன் என்கிறார்கள். ஆனால் தங்கள் குருவை ரகசியமாக நச்சுப் பொருள் கலந்து அல்லது அதிக போதை மருந்து கொடுத்துக் கொலை செய்து தாங்கள் மடத்தின் தலைவராகி விடுகின் றனர். இது சங்கிலித்தொடராக நடந்து வருகிறது, முன்பு அயோத்தியா (பைசபாத்) நகரின் காவல்துறை இணை ஆணையராக இருந்தவரும் தற்போது ரேபரேலி மாவட்டத்தின் ஆணையராக இருக்கும் ஆர்.கே.எஸ் ராதோட் கூறும் போது பைசபாத்(அயோத்தியா) நகரில் இருக்கும் சாதுக்களில் பெரும்பாலானோர் மிகவும் கடுமையான குற்றங்களை செய்தவராக உள்ளனர். 

அவர்களின் பலரது குற்றப் பின்னணியைப் பார்க்கும்போது பெரிய பெரிய கொலை மற்றும் வழிப்பறி குற்ற வாளிகள். நீண்ட காலமாக பைசாபாத் காவல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தர்மேந்திர சிங் கூறுகையில்,

ஏதாவது ஒரு சாமியாரின் மீது புகார் வராத நாள்களே கிடையாது. குழுக்களுக் குள் சண்டை; சிறுமிகள் மற்றும் பெண் களை சீண்டியதாக, போதைப்பொருள் உட்கொண்டு பொது இடத்தில் அநாகரிக மாக நடந்தது என தினசரி புகார்கள் வந்துகொண்டுதான் இருந்தன. சில நேரங்களில் நான் மிகவும் வேதனைப் பட்டதுண்டு இது போன்ற காரியங்கள் செய்வதற்கு சாமியாராக ஏன் இருக்க வேண்டும்? பேசாமல் ரவுடிகளாக மாறி விடலாமே? என நினைப்பதுண்டு.

அயோத்தியாவின் மாஜிஸ்திரேட் தரக்கேஷ்வர் பாண்டே மற்றுமொரு திடுக்கிடும் தகவலைக்கூறுகிறார்.  இராவ ணன் சீதையை கவர எத்தனையோ வேடங்கள் எடுத்திருக்கலாம் ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது சாமியார் வேடம் தான் காரணம்; சாமியார் வேடத்தில் தான் மக்களை எளிதில் ஏமாற்ற முடியும், அயோத்தியாவில் உள்ள அனைத்து சாதுக்கள் மீதும் பெண்கள் மீதான பாலி யல் கொடுமைக்குற்றம், அல்லது போதை உட்கொண்டு ரகளை செய்தல் மற்றும் கொலைக்குற்றம் போன்றவை உண்டு. 

சராயு நதிக்கரையில் உள்ள ராம் ஜானகி கோவில் மடத்தின் தலைமைக் குருவான கிஷோர் சரண் சாஸ்திரி கூறு கிறார். பக்தர்களின் உள்ளத்தில் சாமியை விட சாமியார்கள் தான் உயர்ந்தவர்கள், சாமியார்களுக்குத் தலைவர் குருவே எல்லா அதிகாரங்களையும் கையில் கொண்டவர். ஆகையால் குருவின் காலை பிடித்து சீடனாகவேண்டும்; பிறகு அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தான் குருவாகிவிடவேண்டும். இதுதான் தற்போதைய சாமியார்களின் நடவடிக்கை, 

சாமியார் பராம்பரியம் ஒழுக்கம் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது, எல்லா மடங்களிலும் தலைமைக் குரு தனக்கு எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு சீடர் வழியில் மரணம் நேரலாம் என்று பயத்துடன் தினசரி நாள்களைக் கழிக்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட மத குருக் களின் மரணம் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

2012 ஆம் ஆண்டு நகரின் முக்கிய கோவிலான ஹனுமான் கோவில் மடத்தின் தலைமைக் குருவான ஹரி சங்கர் தாஸ் மீது நவீன ரக கைத்துப்பாக்கி யால் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 8 குண்டுகள் கழுத்து வயிறு மற்றும் தொடை யில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருடைய நீண்ட நாளைய சீடன் ஒருவனே அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டான். அதே மடத்தின் புதிய தலைமைக் குரு ரமேஷ் சரண் தாஸ் மடத்தில் உள்ள 4 சீடர்கள் மீது கொலை முயற்சியில் ஈடு பட்டனர் என்று குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் ஹனுமான் கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஏராளமான சொத்துக்களும் பெருமளவில் குவிந்து இருக்கும் தங்க நகைகளை அபகரிக்கும் நோக்கமே ஆகும். (தொடரும்)

0 comments:

Post a Comment
விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.